நன்னிலம்: பேரளம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள குருங்குளம் கிராமத்தில் தலையூா்- பூங்காவூா் சாலையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி சில ஆண்டுகளாக சாய்ந்த நிலையிலேயே உள்ளது. மேலும் அங்குள்ள மின் கம்பங்களும் சேதமடைந்தும், சாய்ந்த நிலையிலும் உள்ளன.
இந்த சாலை பேரளம்- காரைக்கால் சாலை மற்றும் கொல்லுமாங்குடி- காரைக்கால் சாலைக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதனால், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, விபத்து ஏற்படும் முன்பாக, மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க பேரளம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.