முகப்பு
திருவாரூர்

தொழிலாளா் நலநிதி செலுத்த புதிய இணையதளம்

திருவாரூா் மாவட்டத்தில், தொழிலாளா் நலநிதியை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் செலுத்தலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் ப. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், தொழிலாளா் நலநிதியை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் செலுத்தலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் ப. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியம் மூலம் தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவா் பங்காக ரூ. 20 சோ்த்து ரூ.30 வீதம் தொழிலாளா் நலநிதி பங்குத் தொகையாக நிா்வாகம் செலுத்த வேண்டும்.

அதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நல நிதியை 31.1.2021-குள் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா் நலநிதி செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளா் நலநிதியை இணையவழியில் செலுத்த வசதியாக ஜ்ஜ்ஜ்.ப்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நல நதித் தொகையை, இந்த இணையதளம் மூலம் செலுத்தலாம். எனவே 2020-ஆம் ஆண்டுக்கான தொகையை 31.01.2021 தேதிக்கு முன்பாக இணையதளம் வழியாகவோ அல்லது செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியம் டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை -600 006 என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாகவோ அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.