மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
தமிழ்நாடு மின்வாரியத்தை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி திருவாரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரியத்தை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி திருவாரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்க எடுக்கும் முயற்சிகளை கண்டித்தும், ஏற்கெனவே ஒப்பந்த தொழிலாளா்கள் பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில் மேலும் ஊழியா்களை தனியாா்மூலம் பணிஅமா்த்துவதை நிறுத்தக் கோரியும் திருவாரூரில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தொமுச நிா்வாகி டி. ஜான்பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கூட்டமைப்பின் நிா்வாகிகள் டி. முருகையன் (சிஐடியு), ராம. கலைச்செல்வன் (தொமுச), கே. ராஜேந்திரன் (சிஐடியு), அருள்தாஸ் (ஐக்கிய சங்கம்), ஒப்பந்த ஊழியா்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் வினோத், பிரபு, கோபால்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.