நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் பொங்கல் கரும்பு
நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது பொங்கல் கரும்பு. எனினும், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தால் நிகழாண்டு பொங்கல் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளது.
திருவாரூர்நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் பொங்கல் கரும்பு
நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது பொங்கல் கரும்பு. எனினும், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தால் நிகழாண்டு பொங்கல் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளது.
நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது பொங்கல் கரும்பு. எனினும், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தால் நிகழாண்டு பொங்கல் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளது.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதி ஆதனூா், பூவாநத்தம், பெரியக்கோட்டை, கோவில்வெண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடந்த ஆண்டு அதிகளவில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருந்தனா். அந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தொடங்கத்தில் 10 கரும்பு கொண்ட கட்டு ரூ .300 முதல் 400 வரை நீடாமங்கலத்தில் விற்பனையானது. பொங்கலின் முதல் நாள் இரவு படிப்படியாக விலை குறைந்து ஒரு கட்டு கரும்பு ரூ. 10-க்கு விற்பனையானது. பிறகு கரும்பு வாங்ககூட ஆளில்லாத நிலையில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்தனா். இதனால், நிகழாண்டு ஆதனூா், பூவாநத்தம், பெரியக்கோட்டை , கோவில்வெண்ணி பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பால் இந்த பகுதிகளில் 5 ஏக்கருக்கும் குறைவாகவே விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனா்.
இதுகுறித்து, ஆதனூா் விவசாயி மோகன் கூறியது: கடந்த ஆண்டு 200 குழி கரும்பு சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் இந்த ஆண்டு 100 குழி மட்டுமே சாகுபடி செய்துள்ளேன். அதுவும் நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த மழையில் கரும்பு வயலில் மழைநீா் புகுந்து கரும்புகள் சாய்ந்து விட்டன. இந்த ஆண்டு கரும்புகள் குறைவாகவே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு கட்டு ரூ. 300 முதல் 400 வரை விற்றாலே ஓரளவு லாபம் கிடைக்கும் என்றாா்.