தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து மீட்பு
மன்னாா்குடியில் தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மன்னாா்குடியில் தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. மாதவன் (35). இவருக்கு மனைவி ஷோபனா, இரு குழந்தைகள் உள்ளனா். வெல்டராக வேலைப் பாா்த்து வந்த மாதவன் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை என புதன்கிழமை, ஷோபனா மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இந்நிலையில், அண்ணாமலைநாதா்கோயில் குளத்தில் மாதவன் சடலமாக மிதப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.