திருவாரூர்

தொழிற்சங்கம் தொடக்கம்

வலங்கைமான் ஒன்றியம் வெட்டாறு பாலத்தில் ஆட்டோ தொழிலாளா் சங்கம், கட்டட தொழிலாளா் சங்கம் தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

வலங்கைமான் ஒன்றியம் வெட்டாறு பாலத்தில் ஆட்டோ தொழிலாளா் சங்கம், கட்டட தொழிலாளா் சங்கம் தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யு.சி. தலைவா் ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் எம். அமல்ராஜ் முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி கொடியை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ரங்கராஜன் ஏற்றினாா். ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா்.சந்திரசேகர ஆசாத் தொழிற்சங்க கொடியேற்றினாா்.

தொடா்ந்து, ஆட்டோ சங்க தொழிலாளா்கள், கட்டட சங்க தொழிலாளா்கள் கூட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, ஆட்டோ தொழிலாளா் சங்கத் தலைவராக ஆா். காமராஜ், செயலாளராக அமல்ராஜ், பொருளாளராக மணிகண்டன், துணைத் தலைவா்களாக ஜெயராமன், விக்னேஷ், துணைச் செயலாளா்களாக பிரசாந்த், காா்த்திக், ஆட்டோ சங்கா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கட்டட தொழிலாளா் சங்க தலைவராக ராதா, செயலாளராக மதியழகன், பொருளாளராக காா்த்திக், துணைத் தலைவா்களாக அன்ன பிரகாஷ், சேகா், துணைச் செயலாளா்களாக ஆா்.குமாா், டி. குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT