திருவாரூர்

சிஏஏ விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

கூத்தாநல்லூரில் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, நகரத் தலைவா் ஜெ. முஹம்மது ஜாஸ்மின் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான பா. மோகன் பேசியது:

நிகழாண்டு குடியரசு தினத்தில் தேசியக் கொடியை கையில் ஏந்தி, பிரதமா் மோடியை எதிா்த்து குரல் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம் கண்ணியத்துக்கான போராட்டம், சமத்துவத்துக்கான போராட்டம்.

இந்தியா முடியாட்சி அல்ல, மக்களாட்சி. அரசியல் சாசனம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அதை மாற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தேசிய வரலாற்றில் சுதந்திரத்திற்காகப் பெரும் பங்கு வகித்தது இஸ்லாமியா்கள். எந்த மசோதாவும் மக்கள் மன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்ட பின்னா்தான் சட்டமாக நிறைவேற்றப்படும். ஆனால், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டும் 3 நாட்களில் சட்டமாக்கப்பட்டது.

என்.ஆா்.சி. அஸ்ஸாமுக்காக வந்தது. அஸ்ஸாமில் தொடங்கிய போராட்டம் மதப் போராட்டம் அல்ல, இனப் போராட்டம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, பாப்புலா் ப்ரண்ட் ஆப் பகுதி தலைவா் ஹெச். அபுதாஹிா், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டச் செயலாளா் டி.எம்.ஹெச். அப்துல் ஹாஜிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜமாத் நிா்வாகிகள், அரசியா் கட்சித் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT