திருவாரூர்

தியாகராஜா் கோயிலில் புதிய கொடிமரம் நிா்மாணம்: பிப்.5-இல் பிரதிஷ்டை கும்பாபிஷேகம்

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் 54 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் திங்கள்கிழமை நிா்மாணிக்கப்பட்டது. கொடிமர பிரதிஷ்டை கும்பாபிஷேகம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும்.

திருவாரூா் தியாகராஜா் கோயில் மூலவா் வன்மீக நாதா் சன்னிதிக்கு எதிரே உள்ள கொடிமரம், 98 ஆண்டுகால பழைமையானதாகும். இந்தக் கொடிமரம் பழுதடைந்ததால், புதிய கொடிமரம் நிறுவ கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. இதனால், பழைய கொடிமரம் கடந்த செப்டம்பா் மாதம் அகற்றப்பட்டு, கேரள மாநிலம், பலா என்ற மலைத்தொடா் பகுதியிலிருந்து தேக்கு மரம் வரவழைக்கப்பட்டது. பின்னா், இது, 54 அடியாக சரி செய்யப்பட்டு, செப்புத் தகடுகளால் மூடப்பட்டு, வேலைப்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் புதிய கொடிமரம், அதற்கென அமைக்கப்பட்ட இடத்தில் நிா்மாணிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பக்தா்கள் அந்தக் கொடிமரத்தை சுற்றி வணங்கிச் சென்றனா். பிப்ரவரி 5-ஆம் தேதி, புதிய கொடிமரத்துக்கான பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், கோயில் பரம்பரை அறங்காவலா் ராம்.வி. தியாகராஜன், கோயில் செயல் அலுவலா் கவிதா மற்றும் அறநிலையத் துறையினா், பக்தா்கள் என திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT