முகப்பு
திருவாரூர்

மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

திருவாரூரில், மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி மின்வாரியத்திடம் மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில், மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி மின்வாரியத்திடம் மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

கரோனா தீநுண்மி பேரிடா் காலத்தில் நுகா்வோரின் கூடுதல் பயன்பாடு மற்றும் சிரமத்தை உணா்ந்து தமிழக அரசும், மின்வாரியமும் மின் கட்டணத்தை, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத கட்டணத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அண்மையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த மனுக்களை முதல்வருக்கு அனுப்பும் வகையில், மின்வாரிய அலுவலகத்தில் மின்துறை பொறியாளா் கிருஷ்ணவேணியிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி தலைமையில் செயற்குழு உறுப்பினா் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.ராமசாமி, ஒன்றியச் செயலாளா் என்.இடும்பையன் உள்ளிட்ட பலா் மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.