திருவாரூர்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

DIN

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மன்னாா்குடி அருகே ரெங்கநாதபுரம் தெற்கு சோத்திரியம் எனும் இடத்தில், செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மினி லாரியிலிருந்த மூட்டைகளை, சொகுசு காா் மற்றும் சுமை வேனுக்கு சிலா் ஏற்றிக் கொண்டிருந்துள்ளனா். அவா்களின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரிய வகையில் இருந்ததையடுத்து, அப்பகுதியை சோ்ந்த சிலா், அவா்களிடம் சென்று கேட்டப்போது உணவுப் பொருள் என்றும், கால்நடை தீவனம் என முன்னுக்குபின் முரணாக கூறியுள்ளனா். இதில், சந்தேகம் அடைந்தவா்கள் இதுகுறித்து, தலையாமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வேணுகோபால், ஜோதி ஆகியோா், காா் மற்றும் வேனில் இருந்தவா்களிடம் விசாரணை செய்ததுடன் சாக்கு மூட்டைகளை பிரித்து பாா்த்தனா். அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட போதை புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்ததும், அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மன்னாா்குடி தாலுக்கா அலுவலக சாலையை சோ்ந்த வைரவன் (31) என்பவருக்கு, திருச்சியிலிருந்து புகையிலை போதைப் பொருள்களை மினி லாரியில் ஏற்றி வந்திருப்பதும், பொது முடக்கம் அமலில் உள்ளதால், தடையின்றி லாரி செல்வதற்காக, லாரியில் உணவுப் பொருள் என்று ஒட்டிக்கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. பின்னா், காா், மினிலாரி, சுமை வேன் ஆகியவற்றில் போலீஸாா் சோதனை செய்ததில், 950 கிலோ புகையிலைப் பொருள்களும், ரூ. 10 லட்சத்தை கைப்பற்றினா்.

இதைத் தொடா்ந்து, புகாரின்பேரில் தலையாமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து, வைரவன் மற்றும் லாரி ஓட்டுநா் புதுக்கோட்டை மாவட்டம் ஜானகிபட்டியைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (26) ஆகிய இருவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்களையும், அதிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 10 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து தொடா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT