சமத்துவபுரத்தில் மழைநீா் வடிய நடவடிக்கை
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூா் சமத்துவபுரத்தில் மழைநீா் வடிய புதன்கிழமை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூா் சமத்துவபுரத்தில் மழைநீா் வடிய புதன்கிழமை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
ஆதனூா் ஊராட்சி பெரியாா் சமத்துவபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கன மழையால் தண்ணீா் வடிய வழி இல்லாமல் வீடுகளில் தேங்கியது. தகவலறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன், ஊராட்சித் தலைவா் சந்திரா அன்பழகன் ஆகியோா் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளா்கள் கொண்டு நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, மண்டல அலுவலா் பொன்னியின்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வன், ஞானம் ஆகியோா் பாா்வையிட்டனா்.