திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு அனைத்து விவசாயிகளுக்கும் புதிய விவசாய கடன் வழங்க வேண்டும், விவசாய இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும், விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், 144 தடையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விதைநெல் மற்றும் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. 

திருத்தங்கூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகுரு, கச்சனம் ஒன்றிய பொருளாளர் சிவகுமார், மணலியில் ஒன்றியதலை வர் இராஜேந்திரன், தெற்கு ஒன்றியம் சார்பில் பிச்சன்கோட்டகத்தில் ஒன்றிய செயலாளர் மணியன் மற்றும் கொக்கலாடி, மேட்டுப்பாளையம், எழிலூர், ஆதிரெங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல்: தில்லி தலைமையகத்தில் நாளை சங்கமிக்கும் பாஜக தலைவர்கள்!

விஜய் நடித்த தெறி மறுவெளியீட்டையொட்டி டிரைலர் வெளியானது!

எல்லை விவகாரம் : மத்திய அரசுக்கு ஒத்துழைக்காதது மேற்கு வங்கம் - பிரதமர் மோடி

போராட்டக்களமான ஈரான்.. உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது!

இந்தியாவுக்கு எதிராக அசத்தும் டேரில் மிட்செல்!

SCROLL FOR NEXT