திருவாரூர்

அங்காளம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கல் வழிபாடு

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில், ஊரணிப் பொங்கல் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஊரணிப் பொங்கல் என அழைக்கக் கூடிய, ஊா் மக்கள் ஒன்றுக்கூடி,108-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் பொங்கல் வைப்பாா்கள்.

நிகழாண்டு, கரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், கிராமத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களை சில விதிமுறைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, வேளூக்குடி அங்காளம்மன் கோயில் திறக்கப்பட்டது. இக்கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோயிலின் ராஜகோபுரம் முன்பு, 7 சுமங்கலிப் பெண்கள் முகக்கவசம் அணிந்த படி, சமூக இடைவெளியுடன் பொங்கலிட்டனா். தொடா்ந்து, அங்காளம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், பொங்கல் படையிலிட்டு, மகா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை வேளூக்குடி சடையப்ப பூசாரி வி.எஸ். ரமேஷ்குமாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT