முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி, கோட்டூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கோட்டூரில் மின் கட்டண உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்று.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கோட்டூரில் மின் கட்டண உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்று.

தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள காலக்கட்டத்தில் மின்சாரம் பயன்பாட்டிற்காகன கணக்கெடுப்பு பணியில் குளறுப்படிகள் ஏற்பட்டுள்ளதால் மின் கட்டணம் தொகை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கண்டிப்புடன் வசூலிப்பதை கண்டித்தும், இப்பிரச்னையில் அலட்சியம் போக்குடன் செயல்படும் தமிழக அரசினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னார்குடி காந்தி சாலை வெண்ணத்தாழி மண்டபம் அருகே உள்ள திமுக நகரக் கழக அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக நகரச் செயலர் வீரா.கணேசன் தலைமை வகித்தார்.

இதில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன், மாநில மாணவரணி துணைச் செயலர் த.சோழராஜன் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து கருப்புக் கொடியுடன் கலந்து கொண்டனர்.
 இதேபோல், மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றியச் செயலர் பால.ஞானவேல் தலைமை வகித்தார். இதில, கருப்புச் சட்டை அணிந்து கலந்து கொண்ட திமுகவினர் கருப்புக்கொடியும் தமிழக அரசையும், மின் கட்டண உயர்வினையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →