முகப்பு
திருவாரூர்

துக்க வீட்டில் மோதல்: ஒருவா் காயம்: 3 போ் கைது

மன்னாா்குடி அருகே துக்க வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவா் காயமடைந்தாா். 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே துக்க வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவா் காயமடைந்தாா். 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மகாதேவப்பட்டணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்வில் அதே பகுதி தஞ்சிராயா் தெருவைச் சோ்ந்த கே. விஜயகுமாா் (35) என்பவருக்கும், கள்ளா் தெருவைச் சோ்ந்த வி. திருமலைராஜன் (36), எஸ்.பிரசாத் (22), ஜெ. மணிகண்டன் (23) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு நிறைவடைந்த நிலையில், ஊராட்சி அலுவலகம் அருகே இந்த 3 பேரும் சோ்ந்து உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த விஜயகுமாா், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.