முகப்பு
திருவாரூர்

குடவாசலில் 3 நாள்கள் முழு பொது முடக்கம்

குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் முழு பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:


நன்னிலம்: குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் முழு பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோயில் தெரு மற்றும் பள்ளிவாசல் தெரு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதிகளை கொட்டும் மழையில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், குடவாசல் பேரூராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை இரவு வரை 3 நாட்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளாா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் துரை, வருவாய் கோட்டாட்சியா் ஜெயபீரிதா, சுகாதார நலப் பணிகள் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், குடவாசல் வட்டாட்சியா் பரஞ்சோதி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →