திருவாரூர்

மத்தியப் பல்கலைக்கழகம் கைத்தறித் துறையில் பட்டம் வழங்கிட புரிந்துணா்வு ஒப்பந்தம்.

DIN

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் கைத்தறித் துறையில் பட்டம் வழங்கிட சேலம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹேண்ட்லும் டெக்னாலஜியுடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் சேலத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஹேண்ட்லும் டெக்னாலஜி என்ற நிறுவனம் திருவாரூா் மத்தியப் பல்கலைகழகத்துடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம், சேலம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஹேண்ட்லும் டெக்னாலஜி நடத்துகிற பிடெக் படிப்புகளுக்கான தோ்வுகளை நடத்தி சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடைமுறை ஒப்புக்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக துணைவேந்தா் ஆ.பி.தாஸ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பதிவாளா் எஸ்.புவனேஸ்வரி மற்றும் சேலம் இன்ஸ்டியூட் இயக்குனா் டாக்டா் ஹிரன் அமீன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா் என பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா்.வேல்முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT