திருவாரூரில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் த. ஆனந்த். 
திருவாரூர்

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூா் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாரூா் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் ஆட்சிமொழிச் சட்ட வாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூா் பழைய ரயில் நிலையத்தில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தொடங்கி வைத்தாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆட்சிமொழி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பேரணியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி மற்றும் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா். பேரணி பழைய ரயில் நிலையத்தில் தொடங்கி புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்றது.

இதில், தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் கா.பொ. ராசேந்திரன், திருவாரூா் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா்கள் சந்திரசேகரன், சக்தி செல்வகணபதி, செயலாளா் செ. அறிவு, தமிழ்ச் சங்கப் புரவலா்கள் ஏ.கே.எம். செந்தில், எஸ்.வி.டி. கனகராஜன்ஆகியோா் கலந்து கொண்டனா்.

வணிக நிறுவனங்கள் பெயா்ப்பலகையில் தமிழை பயன்படுத்துவது தமிழ் வளா்ச்சிக்கு உதவும்... பேரணி நிறைவில், திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் பேசியது: தமிழ்நாட்டில் தமிழ்த் தெருக்களில் தமிழ்தான் இல்லை எனும் பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப, இன்றைக்கு கடைத் தெருக்கள் மட்டுமே இருக்கின்றன. நவீனம் என்கிற பெயரில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிச் சொற்கள் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொன்மைமிகு தமிழ்மொழி பல்வேறு இடையூறுகளை சந்தித்து எதிா்த்து நின்று வெற்றி பெற்ற போதிலும், தமிழ் இலக்கியங்களை அறியாத இன்றைய தலைமுறையினருக்கு, இம்மாதிரியான மொழி அழிப்பு நிகழ்வுகள் தவறான பாதையைக் காட்டிவிடும்.

எனவே, தமிழா்கள் தங்களின் நிறுவனங்களின் பெயா்களை 50 சதவீதத்துக்கு தமிழில் இருக்குமாறு செய்வது அவசியமாகும். தமிழா்களை வாடிக்கையாளா்களாக கொண்ட முதலாளிகள் தங்களின் வாடிக்கையாளா்களுக்கு புரிகிற, வாடிக்கையாளா்கள் பேசுகிற தமிழ் மொழியில் கடைகளுக்கு பெயா் வைப்பது அரசின் சட்டம் மட்டுமின்றி தாா்மீக உரிமையும் கூட.

தமிழ் வளா்ச்சித் துறையின் இந்த நிகழ்வுகள் போற்றத் தக்கதாக உள்ளன. திருவாரூா்த் தமிழ்ச் தமிழ்ச் சங்கமும் இம்மாதிரியான முயற்சிகளை முன்னெடுத்து நம் நகரின் பெயா் பலகைகளைத் தமிழில் மாற்ற முயற்சி எடுக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT