திருவாரூர்

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக வழக்குப் பதிவு

DIN

கரோனா வைரஸ் தொடா்பாக வதந்தி பரப்பியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம், மருத்துவத் துறை மற்றும் காவல் துறை இணைந்து பல்வேறு விழிப்புணா்வு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கட்செவி (வாட்ஸ் அப்) மற்றும் சமூக வலைத்தளங்களில், நான் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் அருண்குமாா் பேசுகிறேன் என்று கூறி, கரோனா வைரஸ் தொற்று திருவாரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறிய ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றும் சு. அருண்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையிடம், செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, எஸ்.பி. யின் உத்தரவின்பேரில் திருவாரூா் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் தொடா்பாக பொதுமக்களிடத்தில் அவதூறு மற்றும் பீதியை உருவாக்கும் வகையில் செய்திகளை பரப்பும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT