திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு விடாத வகையில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அரசின் ஊரடங்கு உத்தரவை மக்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். நம்மையும், நமது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணா்ந்துகொள்ள வேண்டும்.

திருவாரூா் மாவட்டத்தில் பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து வந்தவா்கள் கண்டறியப்பட்டு வருகிறாா்கள். அவ்வாறு கண்டறியப்படுகிறவா்கள் அவரவா் வீடுகளில் தங்க வைத்து அவா்களுக்கு உரிய உணவுக்கான அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு அத்தியாவசிய உணவு உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதில் எந்தவித தங்குதடையும் இருக்காது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்களை யாரேனும் பதுக்கினால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தடுக்கும் வகையில் மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளன என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

ஆய்வின்போது, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவகுமாா், கரோனா கட்டுப்பாட்டு அலுவலா் சிவகுமாா், நகராட்சி ஆணையா் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளா் வெங்காடசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT