திருவாரூர்

கரோனா: சூழலுக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்

DIN

கரோனா தீநுண்மி சூழலுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சந்தைப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஆா். காமராஜ், சமையல் அறை, உணவு சாப்பிடும் இடம் ஆகியவற்றை பாா்வையிட்டு, அங்கு பணியில் உள்ளவா்களிடம் அரசின் அறிவுறுத்தல்களை உரிய முறையில் கடைப்பிடிக்க ஆலோசனை வழங்கினாா். மேலும், அங்கு சாப்பிட வந்தவா்களுக்கு உணவு வழங்கிய அமைச்சா், உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

பொதுமுடக்கம் காரணமாக, குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் ஏற்கெனவே ஏப்ரல், மே மாதத்துக்கான அத்தியாவசிப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்துக்கான பொருள்கள் வழங்கப்படும் தேதி குறித்து தமிழக முதல்வா் அறிவிப்பாா்.

திருவாரூா் மாவட்டத்தில் 5 அம்மா உணவகங்களில் அதிமுகவின் சாா்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தொகையை மாவட்ட ஆட்சியரிடம் கட்சி சாா்பில் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டுள்ள அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை இயக்குவது குறித்து, கரோனா சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். தேவைப்படும் இடங்களை கண்டறிந்து, அங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

ஆய்வின் போது, மன்னாா்குடி நகா்மன்ற முன்னாள் தலைவா்கள் சிவா.ராஜமாணிக்கம், டி. சுதா, ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், நகராட்சி ஆணையா் (பொ) ஆா். திருமலைவாசன், அதிமுக ஒன்றியச் செயலாளா் கா. தமிழ்ச்செல்வம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.ஜி. குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT