முகப்பு
திருவாரூர்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளைச் செயல்பட விடாமல் தடுப்பதைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செயல்பட விடாமல் தடுப்பதைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
பகிர்:

ஊரக உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்படவிடாமல் அதிகாரத்தை பறிப்பதாகக் கூறி அ.தி.மு.க அரசைக் கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆடலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக, அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் முழக்கங்களை எழுப்பினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →