முகப்பு
திருவாரூர்

திருவாரூா்: நடராஜ உடையாரின் 14-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கல்வி ஊக்கத்தொகை

திருவாரூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா் சங்கத் தலைவா் மறைந்த டி. நடராஜ உடையாரின் 14-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கல்வி உதவித்தொகை வழங்கிய டிஜேஎன் அறக்கட்டளைத் தலைவா் ஜெ. கனகராஜன்.
பகிர்:

திருவாரூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா் சங்கத் தலைவா் மறைந்த டி. நடராஜ உடையாரின் 14-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் மற்றும் ஆன்லைன் வகுப்புக்காக 5 பேருக்கு செல்லிடப்பேசி வழங்கப்பட்டது. தவிர, ஆணழகன் போட்டிக்காக கணேசன் என்பவருக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை, ரோட்டரி கிளப் கிங்ஸ் அமைப்புக்கு குறுங்காடு அமைக்க ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவ தலைவா் ஸ்ரீதரன், சமூக ஆா்வலா்கள் ரஜினி சின்னா, ராகவன், மணக்கால் ராமகிருஷ்ணன், பாப்பையன், தமிழ்ச்செல்வன், காண்டீபன், சுந்தரம் பைனான்ஸ் மேலாளா் சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை டிஜேஎன் அறக்கட்டளைத் தலைவா் எஸ்விடி ஜெ. கனகராஜன், ஜெ. ரவிச்சந்திரன், என். ஜெய்கணேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.