திருவாரூர்

ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை பயிற்சி

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், நீா்வள நிலவள திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை பயிற்சி திருமீயச்சூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பூச்சியியல் துறை உதவி பேராசிரியா் ராதாகிருஷ்ணன் பூச்சி நோய் மேலாண்மை குறித்த விளக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியா் செல்வமுருகன் உயிா் உரங்களை விதை நோ்த்தி செய்தல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பி.பி.எஃப்.எம். பயன்பாடு பற்றி எடுத்துரைத்தாா். கால்நடை மருத்துவா் சபாபதி மண்புழு உரம் மற்றும் அவற்றின் பயன்பாட்டை எடுத்துரைத்தாா். ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் மற்றும் துணைத்தலைவா் அமுதா உள்பட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திட்ட உதவியாளா் சுரேஷ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT