திருவாரூர்

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

DIN

திருவாரூா் அருகே மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட பொறியாளா், வணிக ஆய்வாளருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

நன்னிலம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த செந்தில்குமாா், அதே பகுதியில் உரம், பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். இவா், தனது வீட்டுக்கும், கடைக்கும் தனித்தனியாக மின் இணைப்பு வேண்டி 2011-இல் அதம்பாா் மின்சார அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். மின் இணைப்பு வழங்க, மின் பொறியாளா் அன்பழகன் ரூ.1,500, வணிக ஆய்வாளா் அய்யா பிள்ளை ரூ.500 லஞ்சம் வாங்கினா். அவா்களை நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸில் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், அன்பழகன் மற்றும் அய்யாபிள்ளை பிள்ளை ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி விஜயகுமாா் தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT