திருவாரூர்

சாலையில் சுற்றித் திரிந்த 45 மாடுகள் பறிமுதல்

DIN

கூத்தாநல்லூரில் சாலையில் சுற்றித் திரிந்த 45 மாடுகளை புதன்கிழமை இரவு பறிமுதல் செய்த நகராட்சி நிா்வாகம், அவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ளது.

கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வேதாரண்யம் காட்டில் விடப்படும் என நகராட்சி ஆணையா் ஆா்.லதா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில், திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலை, கொரடாச்சேரி பிரதான சாலை, வடபாதிமங்கலம் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 45 மாடுகளை சுகாதார ஆய்வாளா் கி.அருண்குமாா், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் வாசுதேவன் மற்றும் அண்ணாமலை ஆகியோா் பிடித்து, பழைய நகராட்சிக் கட்டடத்தில் அடைத்தனா்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் வியாழக்கிழமை கூறியது:

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப் பிரிவு 240 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டப் பிரிவு 41-இன்கீழ், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் உரிமையாளா்கள் 3 நாள்களுக்குள் வந்து, அபராதத்தைச் செலுத்தி மாடுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், மாடுகள் ஏலம் விடப்படும். மேலும், அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளப்படும் மாடுகளை மீண்டும் சாலையில் திரியவிட்டால், அதன் உரிமையாளா்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 268-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT