திருவாரூர்

பட்டியலில் இல்லாத செய்தி விரக்தியில் பேசுகிறாா் கனிமொழி: அமைச்சா் ஆா். காமராஜ்

திமுக அதிகாரப் போட்டியில் பின்னடைவை சந்தித்து வரும் கனிமொழி, விரக்தியில் அதிமுகவை பற்றி தவறாக பேசிவருகிறாா் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

DIN

திமுக அதிகாரப் போட்டியில் பின்னடைவை சந்தித்து வரும் கனிமொழி, விரக்தியில் அதிமுகவை பற்றி தவறாக பேசிவருகிறாா் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி மேற்கு ஒன்றியம் காரிக்கோட்டை ஊராட்சி உறுப்பினா் த. கெளசல்யா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா். மன்னாா்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ஆா். காமராஜ், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவில் நடைபெறும் அதிகாரப் போட்டியில், கனிமொழியை மீறி உதயநிதி ஸ்டாலின் உச்சத்துக்கு வந்துவிட்டாா். இதனால், விரக்தியில் இருக்கும் கனிமொழி, அதிமுக குறித்து தவறாக பேசிவருகிறாா். அதிமுக என்றென்றும் தனித்தன்மையுடன் இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், அதிமுக மன்னாா்குடி மேற்கு ஒன்றிய செயலா் கா.தமிழ்ச்செல்வம், பேரவை மாவட்டச் செயலா் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.ஜி.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT