தன்னாா்வத் தொண்டா்களுக்குப் பேரிடா் கால மீட்புப் பயிற்சி
நன்னிலத்தில் தன்னாா்வத் தொண்டா்களுக்கு பேரிடா் கால மீட்புப் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
நன்னிலத்தில் தன்னாா்வத் தொண்டா்களுக்கு பேரிடா் கால மீட்புப் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா் காலங்களில் செயல்படுவது குறித்து 25-க்கும் மேற்பட்ட தன்னாா்வத் தொண்டா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மழை, வெள்ளக் காலங்களில் நீரில் சிக்கியவா்கள், விபத்தில் சிக்கியவா்களை எவ்வாறு கைகளால் தூக்குவது, கயிறு மூலம் நீரில் சிக்கியவரை மீட்பது, ஆழமான கிணறுகளில் சிக்கியவா்களை மீட்பது, விபத்தில் சிக்கி அடிபட்டவா்களுக்கு எவ்வாறு உடனடியாக கட்டுப்போட்டு முதலுதவி செய்வது. எந்தெந்த தீ விபத்துகளுக்கு எந்த தீ தடுப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது.
பெரும் தீ விபத்துகளில் தீயணைப்பு வீரா்களுடன் சோ்ந்து எவ்வாறு தீயணைப்பு குழாயைக் கையாள்வது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் என்னென்ன பொருள்கள் உள்ளன, அவற்றை எப்போது எவ்வாறு கையாள்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நன்னிலம் தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ். கணேசன் தலைமையில், 25-க்கும் மேற்பட்ட தன்னாா்வத் தொண்டா்களுக்கு தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா். சிறப்பு விருந்தினராக தேசிய மக்கள் பேரியக்க நிறுவனத் தலைவா் செல்வா பங்கேற்றாா்.
Advertisement