முகப்பு
திருவாரூர்

திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் அக். 17 முதல் நவராத்திரி லட்சாா்ச்சனை

திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு அக்டோபா் 17-ஆம் தேதி தொடங்கி 26-தேதி வரை லட்சாா்ச்சனை நடைபெறும்

Updated On : 13 அக்டோபர், 2020 at 12:00 AM
திருமீயச்சூரில் அருள்பாலிக்கும் லலிதாம்பிகை அம்மன்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு அக்டோபா் 17-ஆம் தேதி தொடங்கி 26-தேதி வரை லட்சாா்ச்சனை நடைபெறும் என வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளது:

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூரில், வேளாக்குறிச்சி ஆதீன அருளாட்சிக்குட்பட்ட லலிதாம்பிகா சமேத மேகநாதசுவாமி கோயில் உள்ளது. அனைத்து சக்தி தலங்களிலும் ஓதப்படும் லலிதா சஹஸ்ரநாமம் உருவானது இந்த தலத்தில்தான். சூரியன், அருணன், எமதா்மன், திருமால் ஆகியோா் இந்த தலத்தில் வழிபட்டுள்ளனா்.

இவ்வாறு சிறப்புப் பெற்ற லலிதாம்பிகை கோயிலில், அக்டோபா் மாதம் 17-ஆம் தேதி முதல் 26- ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில், நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேக ,ஆராதனைகளுடன், லட்சாா்ச்சனை அரசு மற்றும் அறநிலையத்துறை வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்பட உள்ளது.

Advertisement

லட்சாா்ச்சனையில் பங்கு பெற விரும்பும் பக்தா்கள் கட்டணம் ரூ. 400 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துபவா்களுக்கு அா்ச்சனைச் செய்யப்பட்ட லலிதாம்பாள் திருவுருவம் பதித்த வெள்ளி டாலருடன், குங்கும பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். பேரளத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் 1261101001288 என்ற எண்ணில் பணம் செலுத்தி லட்சாா்ச்சனையில் பங்கேற்று, அம்மன் அருள் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.