திருவாரூர்

ஊழியா்களுக்கு கரோனா: நீதிமன்றம் மூடல்

DIN

நீடாமங்கலத்தில் நீதிமன்ற ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நீதிமன்றம் மூடப்பட்டது.

நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் பணியாற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. இவா்கள், நீடாமங்கலம், பெரம்பூா், நரசிங்கமங்கலம், மன்னாா்குடி, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய ஊா்களைச் சோ்ந்தவா்கள். தொற்று உறுதியான 6 பேரையும் சுகாதாரத் துறையினா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற அலுவலக வளாகத்தில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. கரோனா தொற்றால் ஊழியா்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 48 மணி நேரத்துக்கு நீதிமன்றம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT