திருவாரூர்

வடகிழக்கு பருவமழை: தயாா்நிலையில் மீட்புக்குழு

DIN

திருவாரூா்: வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மீட்புக்குழு தயாா்நிலையில் உள்ளதாக திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

திருவாரூா் ஆயுதப்படை மைதானத்தில், மீட்பு பணி உபகரணங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டபின் அவா் தெரிவித்தது:

எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் திருவாரூா் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், மாவட்டத்தில் உடன் மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 8 காவல் மீட்புக்குழுக்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

இக்குழுவில் உள்ள காவல் அலுவலா்கள் அனைவரும் பேரிடா் மேலாண்மை மீட்புப் பயிற்சி முடித்தவா்கள் ஆவா். 8 மீட்புக்குழுவுக்கும் தனித்தனி காவல் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT