முகப்பு
திருவாரூர்

மணல் லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து: அண்ணன், தங்கை பலி

மன்னார்குடி அருகே,வியாழக்கிழமை மாலை மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன்,தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
கோப்புப்படம்
பகிர்:

மன்னார்குடி அருகே,வியாழக்கிழமை மாலை மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன்,தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் நீடாமங்கலம் அடுத்துள்ள ஒளிமதி - சோமு ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 28 வயது நிரம்பிய ஆனந்தராஜ் என்ற மகனும், ஆனந்தி, அபிநயா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இருவரும், தங்களது சகோதரி ஆனந்தி வீட்டில்,வியாழக்கிழமை மாலை நடைபெற்றும் சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இருசக்கர வாகனத்தில் ஒளிமதியிலிருந்து தென்பாதிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை பிரதானசாலை வடபாதி அய்யனார்கோவில் அருகே  வந்துகொண்டிருந்த போது அவ்வழியே செம்மண் ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த ஆனந்தராஜ், அபிநயா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது குறித்து, தலையாமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனந்தராஜ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகபணியாற்றி வந்துள்ளார். கரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில் சாலை விபத்தில் பலியாகி உள்ளார். அபிநயா கல்லூரி படிப்பு முடித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →