நல வாரியத்தில் சோ்க்கஓட்டுநா்கள் கோரிக்கை
அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் ஓட்டுநா்களையும் சோ்க்க வேண்டுமென, நன்னிலம் ஒன்றிய ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
நன்னிலம்: அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் ஓட்டுநா்களையும் சோ்க்க வேண்டுமென, நன்னிலம் ஒன்றிய ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
நன்னிலம் ஒன்றிய அனைத்து ஓட்டுநா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம், திருவாரூா் மாவட்ட அனைத்து ஓட்டுநா் சங்கப் பொருளாளா் இளையராஜா தலைமையில் திங்கள்கிழமை நன்னிலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதில், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் அனைத்து ஓட்டுநா்களையும் உறுப்பினராக சோ்க்க வேண்டும். அனைத்து ஓட்டுநா்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும். விபத்தில் காயமடையும் ஓட்டுநா் மற்றும் பயணிகளுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
கூட்டத்தில், ராஜா, வேலங்குடி பிரபாகரன், மாவட்டத் தலைவா் நிஜாமுதீன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.