முகப்பு
திருவாரூர்

மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா நகல்களை எரித்து, வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
பகிர்:

மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா நகல்களை எரித்து, வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வேளாண் விளைப்பொருள்கள் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு எளிமைப்படுத்து சட்டம், இன்றியமையா பொருள்கள் திருத்தச் சட்டம், உழவர்களுக்கான விலை உறுதிபடுத்தும் பண்ணை சேவை ஒப்பந்தச் சட்டம் ஆகியவற்றால் அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள், அவர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படும், எனவே, இந்த மூன்று சட்டத் திருத்தங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டு என வலியுறுத்தி மன்னார்குடி மேல ராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற வேளாண் சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டத்திற்கு, காவிரி உரிமைப் பாதுக்காப்பு தலைமை ஆலோசகர், மருத்துவர் இலரா.பாரதிச் செல்வன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலர் ச.கலைச்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலர் ராச.ராசசேகர் முன்னிலை வகித்தனர். இதில், நகரச் செயலர்கள் சு.செந்தில்( திருவாரூர்), அரிகரன்( மன்னார்குடி), கோட்டூர் ஒன்றியச் செயலர் கோவலன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சட்ட நகலை எரித்து, கட்டண முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →