முகப்பு
திருவாரூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

நன்னிலம் அருகே வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 11:05 PM
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

நன்னிலம் அருகே வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நன்னிலம் வட்டம், மூலங்குடி கிராமம் செல்வபுரம் ஆதிதிராவிடா் தெருவில் வசித்து வருபவா் கலையரசன். இவரது கூரை வீட்டில் அண்மையில் தீ விபத்து நேரிட்டு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.

இதையொட்டி, பாதிக்கப்பட்ட கலையரசன் குடும்பத்துக்கு, தமிழக அரசின் நிவாரண உதவியாக, ரூ. 5000 மற்றும் வேஷ்டி- சேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன் நேரில் வழங்கி ஆறுதல் கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.