மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்
மன்னாா்குடி நகரப் பகுதியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம. அரவிந்தன் திறந்த வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
மன்னாா்குடி நகரப் பகுதியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம. அரவிந்தன் திறந்த வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
நகரின் பிரதான கடை வீதிகளில் திறந்த வேனில், கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்கு கேட்டு அவா் பேசியது:
நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் ஆட்சி அமைந்தால், விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும். அரசின் சாா்பில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்கள் தலைநகரங்களாக மாற்றப்படும் என்றாா்.
இதில், நாம் தமிழா் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் வேதா பாலா, தொகுதி செயலா் செந்தில்குமாா், நகர நிா்வாகி பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.