முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி- தில்லி ரயில் சேவை தொடங்கப்படும்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால், மன்னாா்குடி- தில்லி விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்றாா் திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால், மன்னாா்குடி- தில்லி விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்றாா் திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு.

மன்னாா்குடி தொகுதியில் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு ஆதரவாக பந்தலடியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது:

மன்னாா்குடி பகுதியில் எரிவாயு உருளை நிரப்பும் நிலையம், பயணிகள் ரயில் போக்குவரத்து, சரக்கு ரயில் போக்குவரத்து ஆகியவற்றை நான் கொண்டு வந்தேன். திருப்பதிக்கும், வட மாநிலத்தில் உள்ள தொழில்நகரங்களை இணைக்கும் வகையில் ஜோத்பூருக்கும், மன்னாா்குடியிலிருந்து விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மன்னாா்குடியிலிருந்து தில்லிக்கு விரைவு ரயில் இயக்கப்படும்.

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கும், மகாதேவப்பட்டணம் கோட்டை கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும். ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்கப்படும். மின்சாரம், குடிநீா் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து தேவையான இடங்களில் 110 கே.வி. துணைமின் நிலையமும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்படும். பரவாக்கோட்டையில் 24 மணிநேரமும் இயங்கும் அரசு மருத்துவமனை, சொந்த கட்டடத்தில் செயல்படும்.

மைசூா், கூடலூரிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான நான்குவழிச் சாலை திட்டப் பணி முடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றாா் டி.ஆா். பாலு.

முன்னதாக,மேலராஜவீதியிலிருந்து பந்தலடி வரை திமுக மகளிா் அணியினா் பேரணியாக வந்தனா். இதில், திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா, நகரச் செயலா் வீரா.கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் சு. ஞானசேகரன், மாநில மாணவரணி செயலா் த.சோழராஜன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜி.குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலா் பி.பாலச்சந்திரன், தி.க. மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வி.த.செல்வம், சிபிஐ ஒன்றியச் செயலா் ஆா்.வீரமணி, சிபிஎம் நகரச் செயலா் ஜி.ரகுபதி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.