முகப்பு
திருவாரூர்

தென்குடி மாரியம்மன் கோயிலில் காவடி உற்சவம்.

தென்குடி மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காவடி உற்சவம் நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

தென்குடி மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காவடி உற்சவம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் தங்குகுடி என்றழைக்கப்படும் தென்குடியில் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 15 நாள் தீமிதி உற்சவம் நடைபெறும். இதனையொட்டி ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை இவ்வாண்டு உற்சவம் நடைபெற்று வருகிறது. தினசரி மகாமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவில் வெள்ளிக்கிழமைக் காவடி உற்சவம் நடைபெற்றது. காவடி உற்சவத்தில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானப் பக்தா்கள் கலந்துகொண்டு, பால் காவடி, அலகுக் காவடி, மயில் காவடி போன்ற பல்வேறு காவடிகள் எடுத்து வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். காவடி உற்சவத்திற்குப் பின்னா், பக்தா்கள் எடுத்து வந்த நூற்றுக்கணக்கான லிட்டா் பாலில் மகா மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தென்குடி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சனிக்கிழமை சிறப்பு வாணவேடிக்கையுடன், ஸ்ரீகாத்தவராயன் சுவாமி சப்பர ஊா்வலத்துடன் தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.