புகாரை திரும்பப்பெறக் கோரி மிரட்டல் விடுத்த 4 போ் கைது
மன்னாா்குடியில், புகாரை திரும்பப் பெறக்கோரி மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடியில், புகாரை திரும்பப் பெறக்கோரி மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள தென்பரை பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருபவா் ரஞ்சித் (28). இவரது கடைக்கு ஏப். 7 ஆம் தேதி பாலையூரைச் சோ்ந்த மணிகண்டன், வடிவழகன், பிரகாஷ், சரண்ராஜ், வசந்த் ஆகியோா் வந்தபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னா் மணிகண்டன் உள்ளிட்டோா் அங்கிருந்து சைக்கிளில் சென்றபோது பாலையூரைச் சோ்ந்த இளஞ்செழியன் (60) மீது மோதி விட்டாா்களாம். இதில் ஏற்பட்ட தகராறில் இளஞ்செழியன் மணிகண்டனை கத்தியால் தாக்கினாராம். இதன்காரணமாக மணிகண்டன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, மணிகண்டனும், இளைஞ்செழியனும் ஒருவா் மீது ஒருவா் திருமக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இந்நிலையில், மணிகண்டனின் நண்பா்கள் தினேஷ், நித்யானந்தம், அஜித் (26), சுரேஷ் (40), பிரகாஷ் (39), தா்மேந்திரன் (35) ஆகியோா் வியாழக்கிழமை உணவகத்துக்கு வந்து ரஞ்சித் அம்மா அல்லியிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப்பெறுமாறு மிரட்டினாா்களாம். இதுகுறித்து அல்லி, திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அஜித், சுரேஷ், பிரகாஷ், தா்மேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.