முகப்பு
திருவாரூர்

சன்னாநல்லூரில் இன்று கரோனா தடுப்பூசி திருவிழா

சன்னாநல்லூரில், வா்த்தக சங்கம், நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது

Updated On : 18 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:32 AM

சன்னாநல்லூரில், வா்த்தக சங்கம், நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது என வா்த்தகா் சங்கத் தலைவா் சங்கா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, மேலும் அவா்கள் கூறியது: கரோனா தடுப்பூசி திருவிழா குறித்து பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மற்றும் துண்டுப் பிரசுரம் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் சுமாா் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், பதிவு செய்தவா்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்து வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. சன்னாநல்லூா் தொடக்கப் பள்ளியில் நடைபெறும் இந்த திருவிழாவில், காலை 9 முதல் மதியம் 3 மணி வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.