கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணி
நன்னிலத்தில் கரோனா பாதித்த பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், சுகாதாரப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:34 AM
நன்னிலத்தில் கரோனா பாதித்த பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், சுகாதாரப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் விகேஎன் நகரில் அரசு மருத்துவா் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தொற்று கண்டறியப்பட்ட வீட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் து. கலியபெருமாள் தலைமையில் சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன், அலுவலா் ரவி உள்ளிட்டோா் கபசுரகுடிநீா் வழங்கி, கரோனா நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டுமென அறிவுறுத்தினா்.