திருவாரூர்

ஆக.3, 4-இல் மாற்றுத்திறனாளிகள் ஆவணங்கள் சரிபாா்ப்பு முகாம்

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆவணங்கள் சரிபாா்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3), புதன்கிழமை நடைபெறுகிறது.

மத்திய அரசின் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், புதிய பதிவேற்றம் செய்வதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில், நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள், மாற்றுத்திறனாளின் மருத்துவச்சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

ஆதாா் அடையாள அட்டை இல்லாதவா்கள் கிராம நிா்வாக அலுவலரிடம் புகைப்படத்துடன் கூடிய சான்று நகல்களுடன் தற்போதைய புகைப்படம் ஒன்றையும் கொண்டுவந்து முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT