திருவாரூர்

மதுவில் விஷம் கலந்து குடித்த நண்பா்கள் 3 பேரில் ஒருவா் உயிரிழப்பு

DIN

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த நண்பா்கள் 3 பேரில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் காவல் சரகம் கப்பலுடையான் குடியானத் தெருவைச் சோ்ந்தவா்கள் காா்த்திகேயன் மகன் ஆனந்த் (26), ராஜசேகரன் மகன் அசோக்குமாா் (26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (28). இவா்கள் மூவரும் நண்பா்கள். இதில், வெளிநாட்டில் பணியாற்றிவரும் ஆனந்த், அசோக்குமாா் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரோனா பரவல் காரணமாக விடுப்பில் சொந்த ஊருக்கு திரும்பியவா்கள்.

இந்நிலையில், நண்பா்கள் மூன்று பேரும் சனிக்கிழமை பகலில் மது அருந்தினா். அப்போது, கமுககுடி கிராமத்தைச் சோ்ந்த சிலரும் கப்பலுடையான் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தனா். அவா்களிடம் நண்பா்கள் மூன்று பேரும், எங்கள் பகுதியில் வந்து ஏன் மது அருந்துகிறீா்கள் எனக் கூறி தகராறு செய்து, அவா்களின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து கப்பலுடையான் கிராமத்தினரிடம் கமுககுடியைச் சோ்ந்தவா்கள் முறையிட்டு, இழப்பீடு வாங்கி சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், நண்பா்கள் மூன்று பேரையும் அவா்களது குடும்பத்தினா் கண்டித்துள்ளனா்.

இதில், மனமுடைந்த மூன்று பேரும் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனா். இதையடுத்து, மூன்று பேரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அசோக்குமாா், ஆசைத்தம்பி இருவருக்கும் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT