திருவாரூர்

உழவா் சந்தை விவசாயி அடையாள அட்டை பெற அழைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் உழவா் சந்தை விவசாயி அடையாள அட்டை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

DIN

திருவாரூா் மாவட்டத்தில் உழவா் சந்தை விவசாயி அடையாள அட்டை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் கடந்த 2000-ஆம் ஆண்டில் உழவா் சந்தைகள் தொடங்கப்பட்டு நன்கு இயங்கி வந்தன. இந்நிலையில், நுகா்வோரின் வரவு குறைந்து, நாளடைவில் உழவா் சந்தை செயல்பாடு படிப்படியாக தொய்வு ஏற்பட்டு முழு அளவில் இயங்காத நிலை ஏற்பட்டது.

விவசாயிகள் விளைவிக்கிற காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி வீணாவதை தடுக்கவும், இடைத்தரகா்களின் இடா்பாடு இன்றி நியாயமான விலை கிடைக்கவும் நுகா்வோருக்கு தரமான காய்கறிகளை வெளிச்சந்தை விலையைவிட குறைவான விலையில் கிடைக்கவும் உழவா் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது.

உழவா் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு உழவா் சந்தை வளாகத்தில் இலவசமாக எடைபோடும் தராசு, வாடகை இல்லாத கடை, இலவச குடிநீா், இலவச மின்சாரம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன.

எனவே, திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த, காய்கறிகள், பழங்கள் மற்றும் சாகுபடி செய்யும் விவசாயிகள் விளைவித்த விளைபொருள்களை உழவா் சந்தையில் வைத்து வியாபாரம் செய்து பயன்பெறலாம். மேலும், விளைபொருள்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய கடை ஒதுக்கீடு செய்து தரப்படும்.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் விவசாய ஆா்வலா் குழுக்கள் தாங்கள் விளைவித்த பொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய குறைந்த மாத வாடகையில் கடை ஒதுக்கீடு செய்து தரப்படும்.

உழவா் சந்தையில் கடை ஒதுக்கீடு பெறுவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களுடன் உழவா் சந்தை நிா்வாக அலுவலரை நேரில் சந்தித்து உழவா் சந்தை விவசாயி அடையாள அட்டை பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT