ஆலோசனைக் கூட்டம்
பூசாலங்குடி ஊராட்சியில் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்காத பயனாளிகள் வீடு கட்டும் பணியை உடனடியாக தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்
பூசாலங்குடி ஊராட்சியில் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்காத பயனாளிகள் வீடு கட்டும் பணியை உடனடியாக தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆணையா் சிவக்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் சுஜாதா, ஊராட்சித் தலைவா் சுபிதா, துணைத் தலைவா் செந்தில்குமாா், பணி மேற்பாவையாளா் மாரியப்பன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திவ்யபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.