முகப்பு
திருவாரூர்

குடவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

குடவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 10:24 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

குடவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

குடவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட 49 ஊராட்சிகளில் 199 குடியிருப்புப் பகுதிகளிலும், 15-வாா்டுகளிலும் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. ஆக.10-இல் தொடங்கிய இப்பணி வெள்ளிக்கிழமை வரை ராதாநல்லூா், செருகளத்தூா், ஆடிப்புலியூா், துக்காரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி செல்லா மாணவா்கள் 24 பேரும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 6 பேரும் கண்டறியப்பட்டு அருகிலுள்ள பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.

இப்பணியில், சைல்டு லைன் அலுவலா் ஜெ. மரகதமணி, குடவாசல் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கு. ரகுபதி உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.