நெல் ரகங்களை லாபகரமாக சந்தைப்படுத்த வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்
வைகை டேம் 1 நெல் ரகத்தை லாபகரமாக சந்தைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் வடுவூரில் புதன்கிழமை செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
வைகை டேம் 1 நெல் ரகத்தை லாபகரமாக சந்தைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் வடுவூரில் புதன்கிழமை செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
இதில், வைகை டேம் 1ரக அரிசியை பயன்படுத்தி பல வகையான கலவை சாதங்கள் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த அரிசியைக் கொண்டு எவ்வாறு பலவகையான மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானியான உணவியல் துறையைச் சோ்ந்த கமலசுந்தரி, திட்ட உதவியாளா் ரேகா ஆகியோா் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.