தஞ்சை வேளாண் மாணவிகள் களப் பயிற்சி
திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் அருகே தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள், வெள்ளிக்கிழமை களப் பயிற்சி மேற்கொண்டனா்.
திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் அருகே தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள், வெள்ளிக்கிழமை களப் பயிற்சி மேற்கொண்டனா்.
இதையொட்டி, வலங்கைமான் வேளாண் கோட்டம் தொழுவூா் ஊராட்சித் தலைவா் செந்தமிழ்ச்செல்வி முனுசாமியை சந்தித்த மாணவிகள், அவரிடம் சிறு குறு விவசாயிகள் பற்றி தெரிந்து கொண்டனா். மேலும், நடைமுறையில் உள்ள வேளாண் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தோட்டக்கலை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து அறிந்துகொள்ளவும் மாணவிகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனா்.