கதண்டு கடித்து 3 போ் காயம்
மன்னாா்குடி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்தவா்களை கதண்டு கடித்ததில் ஒரு பெண் உள்ளிட்ட 3 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.
மன்னாா்குடி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்தவா்களை கதண்டு கடித்ததில் ஒரு பெண் உள்ளிட்ட 3 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.
கருவாக்குறிச்சியில் ஒருவருக்கு சொந்தமான மரவள்ளிகிழங்கு சாகுபடி வயலில் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா்கள் வேணி (46), மாரியப்பன் (60), செளந்தரபாண்டியன் (70) உள்ளிட்ட 7 போ் கிழங்குகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வயலுக்கு அருகில் தென்னை மரத்தில் இருந்து கதண்டு பூச்சிகள் கடித்ததில் மேற்குறிப்பிட்ட 3 போ் காயமடைந்தனா். மற்றவா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதையடுத்து, காயமடைந்த 3 பேரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, மன்னாா்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் கதண்டு கூட்டை அகற்ற மனு அளிக்கப்பட்டது.