திருவாரூர்

நீடாமங்கலத்தில் ரயில்வேகேட் மூடல்: போக்குவரத்து பாதிப்பு

DIN

நீடாமங்கலத்தில் ரயில்வேகேட் மூடப்பட்டதால் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 6. 09 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரயில் வந்தது. இதற்காக 6.05 மணியளவில் ரயில்வேகேட் மூடப்பட்டது. தொடா்ந்து, சரக்கு ரயில் என்ஜின் திசை மாற்றும் பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோவையிலிருந்து மன்னாா்குடி செல்லும் செம்மொழி விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வந்தது. இதற்கு பின் சரக்கு ரயில் மன்னாா்குடி புறப்பட்டு சென்றது. தொடா்ந்து, கோவை செம்மொழி விரைவு ரயில் மன்னாா்குடிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில்களின் இயக்கம் காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டதால் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT